Tuesday 28 October, 2008

கலைஞரின் 50 ரூபாய்க்கு மளிகைப் பொருள் திட்டம் மோசடித் திட்டமா? - ஒரு அலசல்......

கலைஞர் அவர்களால் காந்திஅடிகள் பிறந்தநாள் முதல் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் வழங்கும் தமிழக அரசின் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து விதமான மளிகைப் பொருட்களை ஐம்ப்து ரூபாய்க்கு வழங்குவதே இந்தத் திட்டமாகும் .விலைவாசி தினந்தோறும் உயர்ந்துவரும் இந்த இந்த நேரத்தில் கலைஞர் அறிவித்துள்ள இந்தத் திட்டமானது , நிச்சயமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்தரக் கூடியதாகவே தெரிகிறது,தமிழக அரசு இந்தத் திட்டத்தின் படி வழங்கக் கூடிய பொருட்களின் பட்டியல்,மஞ்சள் தூள் 50 கிராம்,கடலைப் பருப்பு 75 கிராம்,சோம்பு 25 கிராம்,பட்டை லவங்கம் 10 கிராம்,மல்லித்தூள் கால்கிலோ,வெந்தயம் 25 கிராம்,மிளகு 25 கிராம்,மிளகாய்த்தூள் கால் கிலோ,கடுகு 25 கிராம்சீரகம் 50 கிராம்ஆகிய 10 பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளாக ஐம்பது ரூபாய்க்கு வழங்கிகிறது அரசு .அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் தலையாய கடமை என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழக எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தையும் எதிர்த்து பல்வேறு விமர்ச்சனக் கருத்துகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.நடிகர் விஜயகாந்த் இந்தப் பட்டியலில் உள்ள பொருட்கள் எல்லாம் சாதாரணமாக கடையில் வாங்கினாலே முப்பத்தி ஐந்து ரூபாய்க்கே கிடைப்பதாகக் கூறியுள்ளார் , இதை மறுத்த கலைஞர் அவ்வாறு கிடைத்தால் இன்னும் விலையைக் குறைத்து மக்களுக்குக் கொடுக்கப் படும் என தெர்வித்து உள்ளார்.எப்போதுமே கலைஞரின் திட்டங்களை அந்த அடிப்படையும் இல்லாமல் ஜெயலலிதாதான் எதிர்த்து கேலியும் கிண்டலும் செய்வார் , எனவே அவர் கூறுவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று நான் எண்ணுவதுண்டு,விஜயகாந்த் புதிதாக வந்துள்ளவர்தானே அவர் கூறுவது கொஞ்சம் நியாயமாக இருக்குமோ என்றெண்ணி அவரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அரசு வழங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலை எங்கள் மளிகைக் கடைக் காரரிடம் கொடுத்து விலை விசாரித்தேன் , அவர் கொடுத்த விலைப் பட்டியல் இதோ ,மஞ்சள் தூள் 50 கிராம் - ரூ5.00கடலைப் பருப்பு 75 கிராம் - ரூ7.50சோம்பு 25 கிராம் - ரூ3.00பட்டை லவங்கம் 10 கிராம் - ரூ5.00மல்லித்தூள் கால்கிலோ- ரூ20.00வெந்தயம் 25 கிராம் - ரூ 1.25மிளகு 25 கிராம் - ரூ5.00மிளகாய்த்தூள் கால் கிலோ- ரூ15.00கடுகு 25 கிராம் - ரூ1.25சீரகம் 50 கிராம் - ரூ10.00மொத்தம் எழுபத்து மூன்று ரூபாய் வருகிறது , ஒருவேளை இவர் வாங்கும் விலையை கணக்கில் கொண்டால் கூட எப்படியும் 65ரூபாய்க்கு குறையாமல் வருகிறது.விஜயகாந்தும் ஜெயலலிதாவை போலவே கண்மூடித்தனமாக அரசின் நல்ல திட்டங்களைக் கூட எதிர்க்கிறார் என்று தெரியவருகிறது, எனவே இனிவரும் காலங்களில் விஜயகாந்தின் அறிக்கைகளுக்கு எந்த மாதிரியான மதிப்பளிப்பது என்று தெரியவில்லை .எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மக்கள்நலன் விரும்பும் உண்மையுள்ள , நாட்டின் நலனுக்காக செயல்படும் எந்த ஒரு அரசியல் கட்சியும் ,அரசு கொண்டுவரும் திட்டங்கள் நல்ல திட்டங்களாக இருந்தால் அதை வரவேற்று அத்திட்டங்கள் முறையாக எந்தவித முறைகேடும் நடைபெறாமல் மக்களை சென்றடைகிறதா என்று கண்காணித்து முறைகேடுகளைத் தடுத்து மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்ய வேண்டும்அரசு கொண்டுவரும் திட்டங்கள் உணமையிலேயே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால் அதை எதிர்த்துப் போராடி மக்களை அந்த பாதிப்பில் இருந்து காப்பற்ற வேண்டும்இப்படி செயல்பட்டால் மட்டுமே ஜனநாயகத் தத்துவம் அர்த்தமுடையதாக இருக்கும் , அல்லது ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகவே மாறிவிடும் என்பதே எனது கருத்து....பின் குறிப்பு: (எழுபத்தி ஐந்து ரூபாய் பெறுமானமுள்ள இந்தப் பொருட்கள் வெறும் முப்பத்தி ஐந்து ரூபாய்க்கே கிடைப்பதாக விஜயகாந்த் கூறியதால் விஜயகாந்தின் வீட்டிற்கு தமிழக மக்கள் அனைவரும் கையில் முப்பத்தி ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு பையுடன் திரண்டு வந்து கொண்டிருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன ).
button="hori";
submit_url ="http://arivili.blogspot.com/2008/10/50.html"

No comments:

தமிழில் எழுதுங்கள்