Tuesday 28 October, 2008

கலைஞர் இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அவசியமா?

தமிழக முதல்வர் திரு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தற்போது ஐந்தாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார் . இந்நினலையில் தற்போது அவர் ஒய்வு பெற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே தோன்றி, இப்போது ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. கலைஞர் இந்தமுறை முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பல தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றி நல்ல விதமாகத்தான் ஆட்சியை தொடங்கினார், ஆனால் தற்போது பல்வேறு அமைச்சர்களை பற்றி வரக்கூடிய குற்றச்சாட்டுகள் , விலைவாசி உயர்வு, காவல் நிலையங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு , இவை எல்லாவற்றையும் விட மின்வெட்டு ஆகிய பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் சற்றே திணறிக் கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.தற்போதைய திமுக ஆட்சிக்கும், முன்னர் 1996-2001-ல் நடைபெற்ற ஆட்சிக்கும் பெருமளவில் வித்தியாசங்களை உணர முடிகிறது. அதாவது இந்த முறை திமுகவின் ஆட்சி கலைஞரின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. கலைஞர் தன்னுடைய முதுமை காரணமாக ஆட்சியில் தனது பிடியை இழந்து வருகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. கலைஞர் அவர்களுக்கு தற்போது எண்பத்தைந்து வயதாகிறது, ஏற்கனவே நான்கு முறை தமிழக முதல்வராக செயலாற்றி தன்னுடைய எண்ணங்கள், தமிழக மக்களுக்கு தான் செய்ய விரும்பிய நன்மைகள் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டார். இனிமேல் அவர் முதல்வராக இருந்து அவர் பெற வேண்டிய புகழ் எதுவும் இல்லை, புதிதாக எந்தப் பட்டத்தையும் பெறப் போவதில்லை, மக்களிடம் ஏற்கனவே இருக்கும் அபிமானத்தை விட அதிகம் பெறப் போவதுமில்லை. முன்பு போல அவரது உடல்நிலையும் ஒத்துழைப்பதாக தெரியவில்லை.தினந்தோறும் அதிகாலையில் இளைஞர்களை போல நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்த கலைஞர் இப்போதெல்லாம் மேடை வரைக்கும் கூட சக்கர நாற்காலியிலே வர வேண்டிய நிலையில்தான் அவரது உடல்நிலை உள்ளது..மேடையிலே மணிகணக்காக அவர் நிகழ்த்தும் உரையை கேட்டு கேட்டு அவரின் விசுவாசிகளாக மாறிய திமுக உடன்பிறப்புகள் இன்று அவர் மேடையிலே நின்று கூட பேசமுடியாமல் உட்கார்ந்து பேசுவதைக் கண்டு கண்கலங்குகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் கலைஞர் இன்னும் முதல்வராகத் தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றி மேலும் தனது உடல்நிலையை மோசமாக்கிக் கொள்வதை அவர் நலம் விரும்பும் யாரும் விரும்பவில்லை , ஆனாலும் கலைஞர் தனது முதல்வர் பதவியில் தொடர விரும்புவதாகவே தெரிகிறது.கலைஞர் தான் நாற்பது வருடமாக கட்டி காப்பாற்றி வளர்த்த திமுக ,தனது காலத்திற்குப் பின் சிதறுண்டு போகாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் தனது காலத்திலேயே தனக்குப் பின் தனது தொண்டர்களை தலைமையேற்கப் போகும் தலைவர் யார் என்பதை தொண்டர்களுக்கு அடையாளம் கட்டி தானே அவரை அப்பதவியில் அமர வைத்து விட வேண்டும், இல்லையென்றால் கலைஞரின் காலத்திற்கு பின்னால் திமுக சிதறுண்டு போவதை யாராலும் தடுக்க முடியாது .கலைஞரின் அரசியல் வாரிசாக அவரால் அடையாளம் காட்டப்பட்டு இன்று திமுகவின் தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் , ஆனால் கலைஞரின் மறைவுக்குப் பின் தனக்கு கட்சியிலும், குடும்பத்திலும் வரும் எதிர்ப்புகளை சமாளித்து தலைவராக அவரால் முடியுமா என்பது சந்தேகமே...அப்படியே ஸ்டாலின் தனது எதிர்ப்புகளை சமாளித்து தலைவராக மாறினால் கூட பின்னர் தேர்தலை சந்தித்து மற்ற கட்சிகளை எல்லாம் வென்று ஆட்சியை பிடித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை ..எனவே கலைஞர் தற்போதே ஆட்சிப் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுத்து, தன்னுடைய காலத்திலேயே கட்சிக்கு ஸ்டாலினை தலைவராக்கி தான் ஒரு வழிகாட்டியாக செயல்பட்டு கட்சியை பலப்படுத்துவதே நல்லது. அதுவே தான் இத்தனை நாளாக அரும்பாடு பட்டு வளர்த்த கட்சியை தனக்குப் பின்னும் காப்பாற்றக் கூடிய செயலாகும். ஸ்டாலின் ஏற்கனவே தனக்கு தரப்பட்ட பொறுப்புகளை சரியாகச் செய்து வந்ததாகவே தெரிகிறது, சென்னை நகரின் மேயராக அவர் செயல்பட்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது, தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் அவரது சயல்பாடு கலைங்கராலேயே பலமுறை பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கலைஞர் தன்னுடைய முதுமையால் ஆட்சியில் கவனம் குறைந்து அதனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, தான் இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றி வந்த நற்பெயரை இழப்பதை விட , தனது மகனான ஸ்டாலினை ஆட்சியில் அமர வைத்து தான் ஒரு வழிகாட்டியாக செயல்படுவதே நல்லது.........
button="hori";
submit_url ="http://arivili.blogspot.com/2008/09/blog-post_29.html"

No comments:

தமிழில் எழுதுங்கள்