Tuesday 28 October, 2008

வைகோ இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பியா? நம்பிக்கைத் துரோகியா?


வைகோ இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பியா? நம்பிக்கைத் துரோகியா?
வைகோவின் உண்மையான நோக்கம் என்ன?வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாளியை உடைத்தது போன்ற காரியத்தைத்தான் வைகோ இப்போது செய்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் 1991 க்கு முன்பும் 1991க்குப் பின்னும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.இலங்கைத் தமிழர்களை ஆதரித்துப் பேசவே பலரும் தயங்கும் நிலை ஏற்பட்டது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களைப் பற்றிப் பேசினாலே அவர்கள் தேசவிரோதிகள் என்று கூறும் சூழ்நிலை உருவாகியது.அதன் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.சிலகாலமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் ஒதுங்கியே இருந்த தமிழக முதல்வர் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருமித்த குரலில் இலங்கைத் தமிழர்களைக் காக்க அணிதிரள ஆரம்பித்தனர்.வைகோ இலங்கை தமிழர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய விரும்பி இருந்தால் ,அய்யா மருத்துவர் ராமதாஸ் " திமுகவிற்கும் தங்களுக்கும் எத்தனையோ அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் இலங்கைத் தமிழர்களைக் காக்க முதல்வருடன் கைகோர்ப்போம் " என்று கூறினார் அது போல வைகோவும் செய்திருக்க வேண்டாமா?கடந்த மூன்றாண்டுகளாக தோல்வியிலும் துவளாத கூட்டணியாக இன்று வரை ஜெயலலிதாவுடன் தொடர்ந்து வரும் நல்லுறவைப் பயன்படுத்தி அவரையும் இப்போராட்டங்களுக்கு ஆதரவாக மாற்ற முயற்சித்து இருக்க வேண்டாமா ?தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது உண்டாகியுள்ள ஆதரவுக் குரல்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு நல்ல தீர்வை எட்ட முயற்சித்து இருக்க வேண்டும் அல்லவா?மத்திய அரசில் நல்ல செல்வாக்குடன் உள்ள தமிழக முதல்வர் அவர்களே இலங்கைத் தமிழர்களைக் காக்கப் பதவியைத் துறக்கத் தயார் என அறிவித்து போராட்டத்தில் குதித்து விட்ட பின்னர் , தானும் களத்தில் குதித்து போராட்டங்களைப் பலப்படுத்தி இருக்க வேண்டாமா?இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆக்கப் பூர்வமான முறையில் தன்னுடைய கருத்துகளை வலியுறுத்தி இருக்க வேண்டாமா?இவை எதையும் வைகோ செய்யவில்லை ,இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக செயல்பட விரும்பாத கட்சிகளும் , தலைவர்களும் எதையாவது கூறி இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சி அலையை அடக்கிவிட வேண்டும் எனக் காத்துக் கொண்டு இருந்தனர் .தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்களை தேசவிரோதிகள் என்று கூறின.தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்கள் எல்லாம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமானவர்கள்தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்கள் எல்லோரும் பிரிவினைவாதிகள் ,தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டில் வன்முறைத் தூண்டி நாட்டை துண்டாடிவிடுவார்கள்,தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர வேண்டும் எனப் பேசுபவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் ,இப்படி எதையாவது இட்டுகட்டிக் கூறி இலங்கைத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அனுதாப அலையைக் கெடுக்க முயன்று வந்தனர்.இந்நிலையில்தான் திடீரென வைகோ எந்த வித அவசியமும் இல்லாமல்21.10.2008 அன்று ஈழத்தமிழர் ஆதரவு கூட்டத்தில் இப்படிப் பேசியுள்ளார்,இந்திய அரசே இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க முயற்சித்து இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுத்து விடாதேதமிழர்களைக் காக்க தமிழ்நாட்டில் முதல் ஆளாக ஆயுதம் ஏந்துவேன்.தமிழக இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதற்காக திரட்டுவேன்.அந்தக் கூட்டத்தில் மு.கண்ணப்பன் பேசியவை,தனித் தமிழ்நாடு மலர்ந்தே தீரும்,இந்தியாவின் இறையாண்மையை முதல்வர், பிரதமர் போன்ற யாராலும் காக்க முடியாது.இவர் பேசிய இந்தப் பேச்சுகளால் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்ன ?வெறும் வாயை மென்று கொண்டு இருந்தவர்களுக்கு அவல் கொடுத்து மெல்ல சொன்னது போல வைகோ பேசிய பேச்சுகள் அமைத்து விட்டன,வைகோவின் இக்தகைய பேச்சுகளைக் கேட்ட, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக செயல்பட விரும்பாத தலைவர்கள் இதுவரை கூறி வந்தது இப்போது உண்மை ஆகி விட்டதல்லவா? எனக் கூறத் தொடங்கி விட்டனர்.இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி அலையை அடக்க ஏதாவது காரணம் கிடைக்காதா என தவித்து வந்த இவர்களுக்கு வைகோவின் பேச்சுகள் மிகப் பெரிய ஆதாரங்கள் ஆகிவிட்டன .தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களைக் காக்க செயல்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தது.வைகோ பேசிய பிரிவினைவாதப் பேச்சுகள் மத்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தலையிடுவதை மறு பரிசீலனை செய்யவைத்து விடாதா?அனுபவமுள்ள அரசியல்வாதியான வைகோ இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக ஏற்பட்ட அனுதாப அலையை சாதகமாகப் பயன்படுத்தாமல், இந்தியாவில் பிரிவினை ஏற்படுத்தப் போவதாகப் பேசுவதால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கப் போகிறது?வைகோ தனது பிரிவினைவாதப் பேச்சுகளால் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க உருவான ஒரு நல்ல வாய்ப்பை கெடுத்து விட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

No comments:

தமிழில் எழுதுங்கள்