Tuesday 28 October, 2008

ஐசிஐசிஐ வங்கி திவாலாகி விட்டதா?.....

ஐசிஐசிஐ வங்கி திவாலாகி விட்டதா?.....
ஐசிஐசிஐ வங்கி திவாலாகி விட்டதாக ஊரெல்லாம் ஒரே பேச்சு . எனக்கு நண்பர்கள் , உறவினர்கள் என பலரும் தொலைபேசியில் அழைத்து விசாரித்தனர், நான் அந்த வங்கியில் பல ஆண்டுகளாக நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளதால் எதுவும் பாதிப்பாகி விடக் கூடாது என்று உண்மையான அன்பில் சிலர் எச்சரிக்க , சிலரோ எதுவும் பாதிப்பாகி விட்டதா என தெரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைவதற்காக அழைத்திருந்தனர் ....சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நிதி முதலீட்டு நிறுவனமான லீமேன் பிரதர்ஸ் திவால் அறிவிப்பை வெளியிட்டதே இதற்கு அடிப்படை காரணமாக அமைந்து , இந்தியா முழுவதும் ஐசிஐசிஐ வங்கி திவாலாகப் போவதாக வதந்தி பரவி பலரையும் திடுக்கிட வைத்தது .எப்போதும் போல எனது நடப்பு கணக்கில் எனது வாடிக்கையாளர்கள் வரவு வைத்திருந்த பணம் பற்றிய விவரங்களை சரி பார்க்க வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி , ஏடிஎம் மையம் பூட்டப் பட்டு இருந்தது. ஏடிஎம் மையத்தின் முன்னால் பெருந்திரளான மக்கள் கூட்டம் , காவலரிடம் என்னவென்று விசாரித்த போது, அவர் எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் மிகவும் வருத்தப்பட்டு மனம் விட்டுப் பேசினார் ,அதாவது நான் எப்போதும் செல்லும் அந்த ஏடிஎம் மையம் , இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பணம் நிரப்பப் படும் என்றும் , மாதத்தின் முதல் வாரம் மட்டும் சம்பள பட்டுவாடா காரணமாக தினந்தோறும் நிரப்பப்படும் என்றும் கூறினார் , ஆனால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்ததால் ஒருநாளைக்கு இரண்டு முறை நிரப்பப்பட வேண்டியிருப்பதாக கூறினார், அதாவது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை ஏடிஎம் மையங்கள் மூலமாக திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தனர் . நாடு முழுவதும் இதே நிலை நிலவுவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஐசிஐசிஐ வங்கி தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையில் , அமெரிக்காவின் லீமேன் பிரதர்ஸ் முதலீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி மிககுறைந்த அளவில் மட்டுமே முதலீடு செய்துள்ளதாகவும் , அந்த முதலீடும் பாதுகாப்பாக உள்ளது என்றும் , வங்கியின் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப் படத் தேவையில்லை எனவும் கூறப் பட்டது. அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் இந்த விவகாரத்தில் அளித்த விளக்கத்தில் ,இது போல எந்த ஒரு அந்நிய நாட்டில் ஏற்படும் பாதிப்பும் இந்திய வங்கிகளையோ , அல்லது இந்திய பொருளாதாரத்தையோ பாதிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும் கூறியுள்ளார் ,எது எப்படியிருந்தாலும் உழைத்து சேர்த்த பணத்தை சீட்டு நிறுவனங்களிடமும் , அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு தனியார் நிதி நிறுவனங்களிடமும் ஏமாந்த மக்கள் , பின்னர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர், சமீபகாலமாக பங்குச் சந்தையும் பெரிய அளவில் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், கிடைப்பது குறைந்த வட்டியாக இருந்தாலும் , பாதுகாப்பாக இருக்குமென்று நம்பி வங்கிகளில் முதலீடு செய்த மக்களின் தலையில் இது போன்ற செய்திகள் இடியாகத்தான் இறங்கும் .....இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் தொலைக்காட்சி, நாளிதழ் போன்ற ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டால் மக்களிடையே ஏற்பட்ட இதுபோன்ற பீதிகளையும், குழப்பங்களையும் தவிர்க்கலாம் .......
button="hori";
submit_url ="http://arivili.blogspot.com/2008/09/blog-post_26.html"

No comments:

தமிழில் எழுதுங்கள்